Skip to main content

Posts

Sorting Out Double Trouble: Solving Duplicate BRP Issue - United Kingdom Recently, I got not one but two BRPs (Biometric Residence Permits) from the Home Office. Both looked exactly the same, except for their numbers. Usually, if you get two BRPs with different info, it's easy to figure out which one to use and send back the old one. But in my case, both were identical, making it confusing to know which was the latest. So, I reached out to the Home Office through their online form , explaining the situation and asking for help, here in the form you can fill only one BRP number, the other BRP number you can provide in the issue description. Surprisingly, they replied within two days. They said they canceled one of the BRPs and told me which one to use. They asked me to send a photo of the canceled BRP , cut into half piece to make sure it's unusable. Email to send to is cdbrp@homeoffice.gov.uk Following their instructions, I sent the photo and used the BRP they said was valid. ...
Recent posts

Visual studio 2017 product key is not applied automatically.

Visual Studio 2017 Unattended Install. Issue: "vs2017_Professional.exe" --add Microsoft.VisualStudio.Workload.ManagedDesktop  --IncludeRecommended  --productKey XXXXX - XXXXX - XXXXX - XXXXX - XXXXX  --norestart --wait Everything works except it won't product the product key automatically.  Resolution: Remove the hyphen (-) in between the product key "vs2017_Professional.exe" --add Microsoft.VisualStudio.Workload.ManagedDesktop  --IncludeRecommended  --productKey XXXXXXXXXXXXXXXXXXXXXXXX  --norestart --wait

உடலை வலிமையாக்கப் புரத பவுடர் உதவுமா?

ஓவியம்: வெங்கி ஜிம்முக்குப் போகிறவர்கள், உடலை வலுப்படுத்த நினைப்பவர்கள் உடல் வலிமைக்குத் தினமும் புரோட்டீன் (புரதம்) பவுடர் உட்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள். இது சரியா? இன்றைய நாகரிகச் சூழலில் இயற்கை உணவில் கிடைக்கும் புரதத்தை நம்புவதைவிட புரோட்டீன் பவுடர், புரோட்டீன் ஷேக் போன்ற செயற்கை ஊட்டச்சத்து பானங்களைப் பயன்படுத்துவது நல்லது எனும் நம்பிக்கை பலரிடம் உள்ளது. இது தவறு. புரதச் சத்து என்பது 20-க்கும் மேற்பட்ட அமினோ அமிலங்களின் கூட்டுச் சேர்க்கை. இது உடல் தசைகளுக்கு வலு சேர்க்கிறது; செல்களின் தேய்மானத்தைக் குறைத்துப் புதுப்பிக்கவும், காயம், புண் போன்றவை ஆறுவதற்கும் உதவுகிறது. என்சைம், ஹார்மோன் (இயக்குநீர்), வைட்டமின், பித்தநீர், ஹீமோகுளோபின் போன்றவை உற்பத்தியாகப் புரதம் அவசியம். நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிற இமுனோ குளோபுலின்களைத் தயாரிக்கவும் இது தேவை. நமக்குத் தினமும் சராசரியாக 50 கிராம் புரதம் அவசியம். இதை நாம் சாப்பிடும் உணவிலிருந்தே பெறலாம். சைவம் சாப்பிடு பவர்கள் பால், தயிர், பருப்பு, பயறு, காளான், எண்ணெய் வித்துகள், கொட்டைகள் வழியாகவும், அசைவம் சாப்பிடுபவர...

பழங்களைத் தோலோடு சாப்பிடுவது நல்லதா?

ஓவியம்: வெங்கி பழங்களைத் தோலோடு சாப்பிடுவதுதான் நல்லது என்கிறார்கள். ஆனால், பழங்களை வாங்கியதும் நாம் செய்யும் முதல் வேலை தோலை நீக்குவதுதான். இது சரியா? தோல்கள் என்றாலே அவை தேவையற்றவை என்று நாம் மனதில் பதிந்து போனதன் விளைவு இது. பல பழங்களில் அவற்றின் உட்பகுதியைவிட தோலில்தான் அதிக சத்துக்கள் இருக்கும். குறிப்பாக சப்போட்டா, மாம்பழம், திராட்சை, கொய்யா, ஆப்பிள், சாத்துக்குடி போன்ற பழங்களின் தோலில் அதிக நார்ச்சத்து இருக்கிறது. இவற்றைத் தோலோடு சாப்பிடுவதுதான் நல்லது. பழங்களைப் பிழிந்து, வடிகட்டி, சாற்றை மட்டும் குடிக்கும்போது நார்ச்சத்து இழக்கப்படும். ஆப்பிள் தோலில் கால்சியம், பொட்டாசியம் தாதுக்களும் வைட்டமின் ஏ, சி சத்துக்களும் நார்ச்சத்தும் அதிகம். இந்தச் சத்துக்கள் இதய நோயாளிகளுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும் மிகவும் தேவைப்படுகின்றன. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்தும் நம் தேவைக்கு உள்ளது. இது புற்றுநோயைத் தடுக்கும் குணம்கொண்டது. ஆகவே, ஆப்பிள் பழத்தைத் தோலோடு சாப்பிட்டால்தான் இந்த சத்துக்கள் கிடைக்கும். மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவும் உடனே அதிகரித்துவிடாது. ஆப்பிளைச் சாறு பிழிந...

முட்டையைப் பச்சையாகக் குடிக்கலாமா?

வளரும் குழந்தைகளுக்கு முட்டையைப் பச்சையாகக் கொடுத்தால் உடல் வலுப்பெறும் என்றும், பூப்படைந்த பெண்களுக்கு ‘பச்சை முட்டை’ தருவது நல்லது என்றும் கூறுவது எந்த அளவுக்கு உண்மை? குழந்தை முதல் பெரியவர்கள்வரை அனைவருக்கும் முட்டை ஒரு சிறந்த உணவு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஒரு முட்டையின் எடையில் சுமார் 60 சதவீதம் வெள்ளை கருவும் 30 சதவீதம் மஞ்சள் கருவும் உள்ளன. வெள்ளைக் கருவில் 90 சதவீதம் தண்ணீர்தான் உள்ளது. 10 சதவீதம் புரதம் உள்ளது. இதில் கொழுப்பு சுத்தமாக இல்லை. கார்போஹைட்ரேட் சத்தும் குறைவு. மஞ்சள் கருவில் 100 சதவீதம் கொழுப்பு உள்ளது. இதன் மஞ்சள் நிறம் குறிப்பிட்ட பறவை இனம் சாப்பிட்ட உணவில் உள்ள ‘கரோட்டினாய்டு’ (Carotenoid), ‘ஸாந்தோபில்’ (Xanthophyil) எனும் மஞ்சள் நிறமிகளின் அளவை பொறுத்து உருவாகிறது. உதாரணமாக மஞ்சள் நிற மக்காச்சோளத்தைத் தின்று வளரும் பறவையின் முட்டை, அதிக அடர்த்தியுடன் கூடிய மஞ்சள் கருவைப் பெற்றிருக்கும். மஞ்சள் கருவில் உள்ள நிறமிகளில் ‘லூட்டின்’ எனும் நிறமிதான் அதிகம். மற்றச் சத்துகள் என்ன? 100 கிராம் கோழி முட்டையில் தண்ணீர் 75 கிராம், கார்போஹைட்ரேட் 1....

இஸ்லாம் வாழ்வியல்: படைப்புகளைப் பழிக்காதீர்கள்!

உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற வித்தியாசமும் வேறுபாடுகளும் மனிதர்களிடையே இருக்கக் கூடாது என்பது நபிகள் நாயகத்தின் போதனை. அல்லாஹ்வின் படைப்புகளில் எதையும் பழிக்காதீர்கள்! மானிடரில் எவரையும் பரிகசிக்காதீர்கள்! குட்டையானவர்களைக் கண்டு குறைகூறும் நோக்கத்தில் ஏளனம் புரியாதீர்கள்! பெண்கள் மீது களங்கம் கற்பிக்கும் பொருட்டு அவதுாறு சொல்லாதீர்கள்! அண்ணல் நபியின் அறக்கட்டளைகள் இவை. அவதுாறு, ஏளனம், பரிகாசம், எள்ளல், இகழ்ச்சியுரை ஆகியவற்றை இறை விசுவாசிகள் தவிர்க்க வேண்டும். அனைத்துப் படைப்புகளையும் அழகாகவே படைத்திருப்பதாகச் சொல்கிறான் இறைவன். ஆகவே, ஒருவர் மற்றவரைப் பழிப்பதும், அவதுாறாகப் பேசுவதும் ஆண்டவன் வெறுக்கும் செயல். அவன் தேவையின்றி வீணுக்காக யாரையும், எதையும் சிருஷ்டிக்கவில்லை என்று குர்ஆன் வசனங்கள் கூறுகின்றன. எனவே, படைப்புகளில் எதையும் பரிகசிக்கும் உரிமை மனிதர்களுக்குக் கிடையாது. உருவத்தைப் பார்த்து எள்ளி நகையாடுவது பாவச் செயல். உருவத்தைவிட உள்ளம் உயர்ந்தது. தோற்றத்தைக் காட்டிலும் துாய எண்ணமும் உணர்வும் மேலானவை. அவ்வாறே, பெண்கள் மீது அவதுாறு சொல்வதும் பெர...

ஒரு நிமிடக் கதை: பயணம்

“கோகுலுக்கும் ஹரிணிக்கும் போரடிக்குது. நாளைக்கு மகா பலிபுரம் போயிட்டு வரலாம்பா. போக வர மூணு மணி நேரம்தான். நம்ம கார்லயே போயிட்டு வந்துடலாம். நீங்களும் வாங்க!” - அப்பா ராகவனிடம் சொன்னான் பிரபாகர். “போகலாம். ஆனா பஸ்ல போனா நானும் வர்றேன். கார்ல போறதா இருந்தா நான் வரலைப்பா” - அப்பா சொன்னதைக் கேட்டு வியப்பாக இருந்தது பிரபாகருக்கு. “பஸ்லயா? இங்கேயிருந்து பஸ் ஸ்டாண்டுக்குப் போயி, அங்கேயிருந்து மகாபலிபுரம் பஸ் பிடிக்கணும். அங்கேயும் ஒவ்வொரு இடத்தையும் பார்க்க ஆட்டோவோ டாக்ஸியோ பிடிக்கணும். கார்ல ஈஸியா போயிட்டு வர்றதை விட்டுட்டு என்னப்பா சொல்றீங்க?” “காருக்கு பெட்ரோல் போடுற செலவு இருக்குல்ல. அதை அங்கே ஆட்டோவுக்குக் குடுக்கலாம்!” “அதுக்கு இல்லப்பா. உங்களுக்கும் சிரமம். பசங்களுக்கும் சிரமம். கார் இருக்குறப்ப எதுக்காக இவ்வளவு சிரமப்படணும்னுதான் கேட்கிறேன்.” “கொஞ்சம் சிரமம்தான். ஆனா பஸ்ல போறதுலேயும் எவ்வளவோ நல்லதுஇருக்கத்தான் செய்யுது.” “என்ன நல்லது? இந்த வேகாத வெயில்ல, கூட்டத்துல சிரமத்தோட போயிட்டு வரணுமா?” ஆச்சரியமாக கேட்டான் பிரபாகர். “வெயில் எல்லாருக்கும்தான் இருக்குது...