ஐடி நிறுவனங்களின் எதிர்பாராத வீழ்ச்சியினாலும் அமெரிக்காவிலேயே இனி ஐடி பணிக்கு ஆட்களைத் தேர்வுசெய்ய வேண்டும் என அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டிருப்பதாலும், இந்தியாவில் பல ஐடி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால், பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஐடி நிறுவனங்கள்! அதிர்ச்சியில் ஊழியர்கள்
ஐடி நிறுவனங்களின் எதிர்பாராத வீழ்ச்சியினாலும் அமெரிக்காவிலேயே இனி ஐடி பணிக்கு ஆட்களைத் தேர்வுசெய்ய வேண்டும் என அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டிருப்பதாலும், இந்தியாவில் பல ஐடி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால், பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பல ஆண்டுகளுக்குப் பின்னர், வரலாறு காணாத அளவுக்கு ஆட்குறைப்பு நடவடிக்கையைக் கையாளவிருக்கின்றன ஐடி நிறுவனங்கள். இந்த நடவடிக்கையில், புதிதாகப் பணிக்குச் சேர்ந்தோர் மட்டுமல்லாமல், 10 முதல் 15 ஆண்டுக்கால அனுபவம் உள்ளவர்களைக்கூட ஐடி நிறுவனங்கள் நீக்குவதற்குத் தயாராக உள்ளன. ஐடி நிறுவனங்களின் கடுமையான நடவடிக்கைகளுக்கு எதிராக, சில பணியாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
’காக்னிஸன்ட்’ நிறுவனம், கடந்த வாரம் மூத்த ஐடி பிரிவு அதிகாரிகளுக்கு ‘தன்னார்வத்துடன் விலகும்’ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அடுத்து, வரும் காலங்களில் 6,000 பணியாளர்களை நீக்கத் தயாராகிவருகிறது ‘காக்னிஸன்ட்’. இதேபோல இன்போசிஸ் நிறுவனமும் புராஜெக்ட் மேனேஜர், சீனியர் தொழில்நுட்ப அதிகாரிகள் என உயர் பதவிகளில் உள்ள 1000 பேரை நீக்கி உத்தரவிட்டுள்ளது.
ஆனால், ஐடி நிறுவனத் தலைவர்கள், சிஇஓ-க்கள், ‘இந்த மாதிரியான ஆட்குறைப்பு நடவடிக்கைகள் ஒவ்வொரு ஆண்டும் இந்தத் துறையில் நிகழ்வதுதான். சரியான ஆட்களைத் தேர்வுசெய்ய, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஐடி துறையில், பணியாளர்களுக்கு தொழிற்சங்கம் அமைப்பது கடினம். பணி நீக்கம் இருந்தாலும் புதியவர்களில் சரியானவர்களை நிறுவனங்கள் தொடர்ந்து தேர்ந்தெடுக்கும்’ என்று கூறுகின்றனர்.
Comments